Home Slider எச்ஐவி இருப்பதை மறைத்து பல பெண்களுடன் உறவு – சிக்கலில் சார்லி ஷீன்!

எச்ஐவி இருப்பதை மறைத்து பல பெண்களுடன் உறவு – சிக்கலில் சார்லி ஷீன்!

680
0
SHARE
Ad

charlie-sheen--நியூ யார்க் – “என்னை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கும் மிரட்டல்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். ஆம்..எனக்கு எச்ஐவி இருக்கிறது” என்று ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் ஒப்புக்கொண்டது முதல் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில், அவரின் இந்த வாக்குமூலம் அவருக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுக்கும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.

“எனக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தும் சில பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொண்டது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு எச்ஐவி பரவவில்லை என்பதை எனது டாக்டர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்” என்று அவர் தனது பேட்டியில் கூறி இருந்தார்.

இந்நிலையில், அவர் தனக்கு நோய் இருப்பதை மறைத்து தன்னுடன் தொடர்பில் இருந்ததாக அவரது முன்னாள் காதலிகளில் ஒருவரும், ஆபாச பட நடிகையுமான ப்ரீ ஒல்சன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர் மீது ப்ரீ வழக்கு தொடரவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், ப்ரீ ஒல்சனின் குற்றச்சாட்டினை சார்லி ஷீனின் மேலாளர் முற்றிலும் மறுத்துள்ளார்.  ப்ரீ ஒல்சனுடன், சார்லி ஷீன் தொடர்பில் இருந்த போது அவருக்கு எச்ஐவி நோய் இல்லை என்று கூறியுள்ளார்.

எனினும் ஷீன் தனது பேட்டியில் நோய் இருப்பது தெரிந்தும் பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்ததை ஒத்துக் கொண்டுள்ளதால், பலர் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவே சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது நோய் குறித்த ரகசியங்களை வெளியிடாமல் இருக்க ஷீன் பலருக்கு 10 மில்லியன் டாலர்கள் வரை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.