Home Featured கலையுலகம் “ஆம்..எனக்கு எச்ஐவி இருக்கிறது” – உறுதிப்படுத்தினார் சார்லி ஷீன்

“ஆம்..எனக்கு எச்ஐவி இருக்கிறது” – உறுதிப்படுத்தினார் சார்லி ஷீன்

613
0
SHARE
Ad

Charlieநியூயார்க் – பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் தன்னைப் பற்றி கூறப்பட்டு வந்த ஆருடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனக்கு எச்ஐவி நோய் இருப்பதை இன்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் உறுதிப்படுத்தினார்.

“எனக்கு எச்ஐவி இருப்பதை நான் இங்கு ஒப்புக் கொள்கிறேன்” என்று சார்லி இன்று மாலை அமெரிக்காவின் என்பிசி டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனக்கு எச்ஐவி இருப்பதை அறிந்து கொண்டதாகவும், நண்பர்கள் என தான் நம்பியவர்களிடம் அத்தகவலைப் பகிர்ந்து கொண்ட போது, அவர்கள் அதை வைத்து தன்னை இத்தனை நாட்கள் மிரட்டி வந்ததாகவும் சார்லி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று தான் அந்த சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டதாகவும் சார்லி குறிப்பிட்டுள்ளார்.

தவறான முடிவுகள்

தான் மது அருந்தி, போதைப் பழக்கத்திற்கு ஆளானதும், அதனால் எடுத்த தவறான முடிவுகளும் தான் தனது இந்த நிலைக்குக் காரணம் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்ட சார்லி, தன்னால் யாருக்கும் அந்த நோய் பரவவில்லை என்று உறுதியாகக் கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சார்லிக்கு மருத்துவம் பார்த்து வரும் ராபர்ட் ஹுய்சென்கா, அப்பேட்டியில் கூறுகையில், சார்லி தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவரது ரத்தத்தில் கண்டுபிடிக்க இயலாத அளவில் தான் எச்ஐவி கிருமி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சார்லி ஷீனுக்கு எயிட்ஸ் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.