கோலாலம்பூர் – முன்னாள் மலேசியத் தூதரக அதிகாரி முகமட் ரிசல்மான் இஸ்மாயில், நியூசிலாந்துப் பெண்ணை ‘பாலியல் நோக்கத்துடன்’ தான் வீடு வரை பின் தொடர்ந்துள்ளார் என வெலிங்டன் உயர்நீதிமன்றம் இன்று தனது விசாரணை முடிவில் தெரிவித்துள்ளது.
அவர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்குக் காரணம் அவர் அந்த நேரத்தில் தனது சுயக் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அதன் காரணமாகத் தான் அவர் அப்பெண்ணிடம் பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சி செய்துள்ளார் என்றும் நீதிபதி டேவிட் கோலின்ஸ் அறிவித்ததாக நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அவர் தனது சுயக்கட்டுப்பாட்டை இழந்ததற்குக் காரணம் அவர் எடுத்துக் கொண்ட போதை வஸ்து தான் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.