வெலிங்டன் – நியூசிலாந்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிசல்மான் இஸ்மாயிலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளத
தற்காப்பு வழக்கறிஞர் டாக்டர் டொனால்ட் ஸ்டீவன்ஸ் மற்றும் அரச வழக்கறிஞர் கிராண்ட் பர்ஸ்டன் ஆகியோரது வாதங்களைக் கேட்ட வெலிங்டன் உயர்நீதிமன்றம், ரிசல்மான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்து அவருக்கு இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
நியூசிலாந்து சட்டப்படி, வீட்டுக் காவல் என்பது அங்கீகரிக்கப்பட்ட வீட்டில், வாரத்தில் 7 நாளும், 24 மணி நேரங்களும் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுவதாகும்.
இதனிடையே, குற்றவாளி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் எழுதுவதோடு, நஷ்டஈடும் வழங்க வேண்டும்.
நீதிபதி டேவிட் கோலின்ஸ் தனது தீர்ப்பில், “அவள் ஒரு இளம் வயது பெண், அவள் தனது படுக்கையறையில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் தனியாக இருக்கும் போது பிலிங்ஸ்லேவை (பாதிக்கப்பட்ட பெண்) நீங்கள் திகிலடையச் செய்துள்ளீர்கள்.”
“பாதிக்கப்பட்ட மிஸ் பிலிங்ஸ்லேவின் அறிக்கையை நான் கவனமுடன் வாசித்தேன். நீங்கள் அவளை அச்சமூட்டியது தெளிவாகத் தெரிகின்றது” என்று தெரிவித்துள்ளார்.