Home Featured கலையுலகம் “ஸ்ருதி நான் எழுதிய கவிதைகளில் ஒன்று” – கமல் நெகிழ்ச்சி!

“ஸ்ருதி நான் எழுதிய கவிதைகளில் ஒன்று” – கமல் நெகிழ்ச்சி!

650
0
SHARE
Ad

shrk3கோலாலம்பூர் – “ஸ்ருதி, நான் எழுதிய கவிதைகளில் ஒன்று – அதுவும் விரும்பிய எழுதிய கவிதை” – தனது மகள் ஸ்ருதிஹாசன் பற்றிய ஆனந்த விகடனின் கேள்விக்கு நடிகரும், ஸ்ருதிஹாசனின் தந்தையுமான கமல்ஹாசன் இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

ஒரு முழு நீளப் படத்திற்கு இசையமைக்கும் ஆற்றலும், மிகத் திறமையான ஆங்கிலப் புலமையையும் ஸ்ருதி கொண்டிருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“எனக்கு என்ன தகுதியோ, அதற்கு ஏற்ற வெற்றி வரணும். அதை அடைந்தே தீருவேன் – என்ற வைராக்கியமும் ஸ்ருதியிடம் உள்ளது. அவர் நடிக்க வந்த புதிதில் ஒரு திட்டம் போட்டோம். அவரை பெரிய அளவில் விளம்பரம் செய்து டமாரம் அடித்து ராஜ்கமல் மூலம் அறிமுகப்படுத்தக் கூடாது என்பதே அது. `ஸ்ருதி, நான் உன்னிடம் வந்து தேதி கேட்பேன். அப்போது `பார்த்துச் சொல்றேன்’ எனச் சொல்லி என்னிடம் சம்பளம் பேசி வாதாடி, எந்தச் சலுகையும் இல்லாமல் நான் அந்தச் சம்பளத்தை சந்தோஷமாக உனக்குக்  கொடுக்க வேண்டும்’ என்றேன். இன்று அதுதான் நடக்கிறது.’’ என்று கமல்ஹாசன் பெருமையுடன் கூறியுள்ளார்.

மேலும், தற்போது ராஜ்கமல் மற்றும் லைக்கா தயாரிக்கும் புதிய படத்தில் தானும், ஸ்ருதியும் இணைந்து நடிக்கிறோம் என்றும் கமலும் தெரிவித்துள்ளார்.