Home Slider மீண்டும் வருகிறார் மருதநாயகம்!

மீண்டும் வருகிறார் மருதநாயகம்!

605
0
SHARE
Ad

marudhanayagam1சென்னை – 1997-ம் ஆண்டு இந்தியத் திரை உலகமே திரும்பிப் பார்த்த ஒரு தயாரிப்பு கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’. எவ்வளவு வேகமாக தொடங்கப்பட்டதோ அதே வேகத்தில் நிதி நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டது. தொடக்க விழாவிற்கே இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தை அழைத்து வந்த ஆச்சரியப்படுத்திய கமல், இந்த படத்தின் மூலம் பல்வேறு ஆச்சரியங்களை அளிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த திரைபட ரசிகர்களுக்கு, படம் கைவிடப்பட்ட செய்தி அதிர்ச்சியை அளித்தது.

அதன் பிறகு பல்வேறு பிரம்மாண்ட திரைப்படங்கள், வரலாற்றுப் படங்கள் வந்தாலும்,  ‘மருதநாயகம்’ எப்போது வருவார் என தொடர் கேள்விகள் இருந்து வந்தன. இந்நிலையில் அந்த படத்தை மீண்டும் எடுப்பதற்காக பிரபல நிறுவனத்துடன் கமல் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாக செய்திகள் உலா வந்தன.

அதனை மெய்படுத்தும் வகையில், ஐங்கரன் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ‘மருதநாயகம்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.