Home Featured கலையுலகம் “பீப் பாடலில் தொடர்புடையவர்களைத் தூக்கிலிடுங்கள்” – மூத்த நடிகர் ஆவேசம்!

“பீப் பாடலில் தொடர்புடையவர்களைத் தூக்கிலிடுங்கள்” – மூத்த நடிகர் ஆவேசம்!

626
0
SHARE
Ad

ygeemahசென்னை – சர்ச்சைக்குரிய பீப் பாடலுக்கு யார் பொறுப்போ அவர்களை கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும் என மூத்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக சாடி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், “மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல்..பீப் பாடல். அனிருத் தனக்கு அந்த பாடலுக்கு தொடர்பு இல்லை என தெளிவாகக் கூறிவிட்டார். பைத்தியக்காரத்தனமான இந்த பாடல் கண்டனத்துக்குரியது. இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அபத்தமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு இனிமையும் இல்லை.”

இந்த பாடல் குழந்தைகளை, அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன? எனக் கேட்கச் செய்து பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலே. இப்படியான இந்தப் பாடல் அவசியமான ஒன்றுதானா? இது பிறரால் வெளியிடப்பட்டதோ, வெளியிடப்படவில்லையோ, ஆனால் கட்டாயம் மூளை பாதிக்கப்பட்ட ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க இயலும்.”

#TamilSchoolmychoice

“கண்ணதாசன் தனது கல்லறையில் கண்டிப்பாக நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன், உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.