Home Featured கலையுலகம் சிம்புவுடன் இணைந்து பணியாற்றினால் என்ன தவறு? – அனிருத் கேள்வி!

சிம்புவுடன் இணைந்து பணியாற்றினால் என்ன தவறு? – அனிருத் கேள்வி!

719
0
SHARE
Ad

simbufbசென்னை – நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றினால் என்ன தவறு? என அனிருத் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில், சிப்புவுடம் மீண்டும் பணியாற்றுவீர்களா என கேட்கப்பட்டதற்கு, அனிருத் கூறியதாவது: –

பீப் பாடல் சர்ச்சைகளை என்னால் மறக்க முடியாது. அது ஒரு சின்ன விஷயம். தேவையில்லாமல் பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனக்கும் அந்தப் பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் கடிதம் கொடுத்துவிட்டேன்.

இதனால் ஏன் நான் சிம்வுடன் பணியாற்றாமல் இருக்கப் போகிறேன். உண்மையைச் சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் வேலை செய்தால்  என்ன செய்யப்போகிறோம் என்பதில் கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார் அனிருத்.

#TamilSchoolmychoice