Home Featured இந்தியா விஜய் மல்லையாவிற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மனு!

விஜய் மல்லையாவிற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மனு!

521
0
SHARE
Ad

vijay-mallyaபெங்களூர் – யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார்.

இதில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.

நீண்ட நாள்களாக கடனை திரும்ப செலுத்தாத நிலையில், விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்’ என்ற பட்டியலின்கீழ் முதன்முதலாக யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

#TamilSchoolmychoice

அதனை தொடர்ந்து ஸ்டேட் வங்கியும், “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்’ என்ற பட்டியலின் கீழ் அறிவித்தது. இந்நிலையில், மதுபான தொழிலதிபர் மற்றும் அவரது கிங்பிசர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் பிரதிவாதிகள் 9 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று மணு அனுப்பியுள்ளது.

விஜய் மல்லையாவை கைது செய்ய வேண்டும், அவரது பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பண மோசடி தொடர்பான மனுவை மட்டும் முதலில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிபதி பெனகனஹல்லி தெரிவித்தார். மேலும், மல்லையாவை கைது செய்வது மற்றும் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்வது தொடர்பான மனுக்களை மார்ச் 7-ஆம் தேதி வரை கடன் மீட்பு தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.