ஹராரே – ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே – புலவாயோ நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றும் மினி பேருந்தும் சென்று கொண்டிருந்தன. அப்போது ஒரு பேருந்தின் சக்கரம் திடீரென வெடித்தது.
இதனால் வேகமாகச் சென்ற பேருந்து, நிலை தடுமாறி மறுதிசையில் வந்து கொண்டிருந்தது பேருந்து மீது பயங்கரமான மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர்கள் உட்பட 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் ஜிம்பாவேயில் நடந்த சாலை விபத்துக்களில் இது கோர விபத்து என போலீஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.