Home Featured தமிழ் நாடு அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் – நடிகர் ராதாரவி!

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் – நடிகர் ராதாரவி!

648
0
SHARE
Ad

rahaதிருவண்ணாமலை – திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியில் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படபிடிப்பு நடக்கிறது. இதில் நடிகர் ராதாரவி நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக வந்திருந்த நடிகர் ராதாரவி நேற்று திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-வேட்டவலம் பகுதியில் 2 நாட்கள் படபிடிப்பு நடக்கிறது. இதில் கலந்து கொள்கிறேன். பழனியிலும் படப்பிடிப்பு நடந்தது. எங்கு சென்றாலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை காணமுடிகிறது. சட்டமன்ற தேர்தலிலும் அவர்தான் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் ஆசைப்படவில்லை. பணமும் கட்டவில்லை. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் பெரிய கட்சியாக உள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற வெற்றிக்கு அ.தி.மு.க.தான் காரணம். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மழையால் பாதிக்கப்பட்ட அனவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க பிரச்சினையில் அனைத்து கணக்குகளையும் கொடுத்துவிட்டோம். தற்போது தவறான புகாரை கொடுத்துள்ளார்கள். எதையும் சட்டரீதியாக சந்திப்போம். வரும் 20-ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அப்போது யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இந்த புகாரை கொடுத்துள்ளனர் என அவர் கூறினார்.