Home One Line P2 இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், ராதாரவி சர்ச்சை பேச்சு!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், ராதாரவி சர்ச்சை பேச்சு!

868
0
SHARE
Ad

சென்னை: மீண்டும் சர்ச்சைக்குரிய விதத்தில் நடிகர் ராதா ரவி பேசியது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசும் போது, இந்தச் சட்டத்திற்கு எதிராக அணி திரண்டுள்ள இந்திய முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு போய் பாகிஸ்தானில் விட்டு விடுங்கள் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ராதா ரவி அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சி, இந்திய முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தினால் பாதிப்பு கிடையாது என்று குறிப்பிட்ட போதும், இந்திய முஸ்லிம்கள் போராடுவது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அங்கு இருக்கும் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம்) முஸ்லிம்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா. ஆனால், உங்களை ஏற்றுக் கொள்ளும் இந்த நாட்டிற்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள்.” என்று அவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படும்.