கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஜாப்ராபாத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிஏஏ மற்றும், என்ஆர்சி ஆகியவற்றிலிருந்து விடுதலை வேண்டும் என்ற முழங்களுக்குப் பிறகு அங்கு கலவரம் வெடித்தது.
இந்த போராட்டம் திடீரென பெரும் மோதலாக மாறி உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு வித்திட்டுள்ளது. இந்த போராட்டம் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்டது என்று காவல் துறைத் தெரிவித்துள்ளது.
இதனால், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு காணொளியில், சிவப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காவலரை மிரட்டி விட்டு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதும் வெளியாகி உள்ளது.
Comments