Home One Line P2 பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண் கைது!

788
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும் நடந்து வரும் நிலையில், அனைத்து இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சி சார்பில் நேற்று வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய இளம்பெண்ணைத் தேசத்துரோக வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அமுல்யா எனும் அப்பெண் திடீரென மேடையேறி “பாகிஸ்தான் சிந்தாபாத்” என முழக்கம் எழுப்பினார். அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அந்த பெண்ணிடமிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கினர்.

அப்பெண் மேலும் பேச முற்படும் போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த பெண்ணை மேலும் பேச விடாமல் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அசாதுட்டின் ஓவைசி கூறுகையில், அந்தப் பெண்ணுக்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்த பெண்ணை இந்தக்கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.