Home One Line P2 குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு!

குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு!

862
0
SHARE
Ad

புது டில்லி: டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய சட்டத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையில் நடந்த கலவரத்தில் பல்வேறு சொத்துகள் உட்பட உயிர் சேதங்களும் ஏற்பட்டன.

வன்முறையில் உயிரிழந்து அடையாளம் காண முடியாத சடலங்களை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு டில்லி காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாஜக தலைவர்கள் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதுதான் வன்முறைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டில்லி காவல் துறையினர், கலவரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர்.