Home One Line P2 குடியுரிமைத் திருத்தச் சட்டம்: கலவரத்தில் 38 பேர் பலி, நிலைமை சீரடைகிறது!

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: கலவரத்தில் 38 பேர் பலி, நிலைமை சீரடைகிறது!

749
0
SHARE
Ad

புது டில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக அச்சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சு, டில்லியில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதன்முறையாகக் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மக்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இனவாத பதட்டத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குழுக்களின் தீய எணங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் உள்துறை அமைச்சு ஓரு அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.