இன்று வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூரில் மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, ஜோகூர் பாரு திரும்பிய மாமன்னர் அதிரடியாக புதிய மந்திரி பெசாரை நியமித்திருக்கிறார்.
அந்த சந்திப்பின்போது மஇகாவின் கஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்தியானந்தனும், மஇகாவின் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவின்குமார் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டனர்.
ஜோகூர் மாநிலத்தின் புதிய அரசாங்கத்தில் மஇகாவும் இடம் பெறுவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்தியர் சார்பாக ஓர் ஆட்சிக் குழு உறுப்பினர் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பதால் நீண்டகாலமாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரும், ஏற்கனவே ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவருமான வித்தியானந்தன் ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.