
ஜோகூர் பாரு: ஜோகூரில் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட் புதிய மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுள்ளார்.
ஜோகூர் அரண்மனையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாகக் கூறி ஜோகூர் சுல்தானை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.