Home One Line P1 அம்னோ, பாஸ் மொகிதின் யாசினுக்கு ஆதரவு!

அம்னோ, பாஸ் மொகிதின் யாசினுக்கு ஆதரவு!

776
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவும் பாஸ் கட்சியும் மொகிதின் யாசின் 8-வது பிரதமராக பதவி ஏற்க ஆதரவு தெரிவித்துள்ளன.

இரு கட்சிகளின் பொதுச்செயலாளர்களான அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹாசான் ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்னோ மற்றும் பாஸ் மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பெர்சாத்து 36 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக மொகிதினுக்கு 93 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது .

#TamilSchoolmychoice

மசீச, மஇகா, மற்றும் மற்றும் பிபிஆர்எஸ் மொகிதினை ஆதரித்தால், இந்த எண்ணிக்கை 97- ஆக மாறும்.

நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.