Home One Line P1 அன்வாரிடம் பெரும்பான்மை உள்ளது- மாமன்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

அன்வாரிடம் பெரும்பான்மை உள்ளது- மாமன்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

776
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: அரண்மனை வெளியிட்ட அறிக்கைக்கு தலை வணங்குவதாகவும், நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்றவாரு மாமன்னரின் முயற்சிக்கும், நல்லதொரு முடிவினை எடுப்பார் என்றும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு நம்புவதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்மையில் மாமன்னர் நடத்திய நேர்காணலில், பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பெரும்பான்மையில் இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

இது விவகாரமாக மாமன்னரை சந்திக்க அன்வார் இப்ராகிமிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பிரதமர் தேர்வு தொடர்பான விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாமன்னரின் உரிமையின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.