Home One Line P2 நடிகர் ராதா ரவி, ‘மச்சான்ஸ்’ நடிகை நமீதா பாஜகவில் இணைந்தனர்

நடிகர் ராதா ரவி, ‘மச்சான்ஸ்’ நடிகை நமீதா பாஜகவில் இணைந்தனர்

814
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது, ஆதரவு கிடைக்காது என திராவிடக் கட்சிகள் அடிக்கடி கிண்டலடித்து வந்தாலும், தமிழகத்தில் தனது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

தற்போது அதிரடியாக, நடிகர் ராதாரவியும், நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு திரை நட்சத்திரங்களுக்கும், தமிழகத்தில் பெரிய அளவில் ஆதரவுக் களம் இல்லாவிட்டாலும், கூட்டத்தினரை ஈர்க்கும் ஈர்ப்பு சக்தி கொண்டவர்களாக இந்த இரு நட்சத்திரங்களும் பார்க்கப்படுகின்றனர்.

பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் திருவள்ளூரில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த இரு நட்சத்திரங்களும் அந்தக் கட்சியில் இணைந்தனர்.

#TamilSchoolmychoice

திமுக, அதிமுக என மாறி மாறி அரசியலில் இயங்கி வந்த ராதா ரவி (படம்) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆவார்.

ஆஜானுபாகுவான கவர்ச்சித் தோற்றம் கொண்ட நமீதா, ஆரம்பப் படங்களில் கவர்ச்சியாக நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர், பல படங்களில் கதாநாயகியாகவும், துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

தனது இரசிகர்களை நமீதா அடிக்கடி ‘மச்சான்ஸ்’ என அழைத்து அதன் மூலம் அந்த வார்த்தையே தமிழகத்தில் பிரபலமானது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.