Home One Line P2 அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் சேவையில் உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள்

அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் சேவையில் உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள்

1156
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உங்கள் வார இறுதி நாட்களை எவ்வாறு கழிப்பது என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி எப்போது வேண்டுமென்றாலும் மற்றும் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். அவ்வகையில், ஆன் டிமாண்ட் சேவையில் நீங்கள் காண வேண்டிய 5 சிறந்த உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள் இவை:

1) மாங்கல்யம் தந்துனானேனா

கபிலன் கதையில், கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில், பால கணபதி வில்லியம், ரெனீதா வீரையா, லிங்கேஸ்வரன், குபேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நாடகத்தின் “ஒரு போதும் பிரிவொன்று இல்லை – அன்பே – பிரிந்தாலும் நான் வாழமாட்டேன்” பாடல், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காதலை இழந்து தவிக்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையும் காதலுக்காக தனது எதிர்காலத்தை தியாகம் செய்யும் மற்றொரு இளைஞனின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்ட கதையாகும் இது.

2) தேடல்கள்

காப்புறுதி ஏஜெண்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச் சமாளிக்கும் பொறுப்பை தருகின்றார். அந்நிறுவனத்தின் காப்புறுதி வாடிக்கையாளர் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு காலமாகவே, அவரது இரத்த சொந்த உறவினர் ஒருவர் இறந்தவரின் காப்பீடு பணத்தைக் கொடுக்குமாறு நிறுவனத்தைக் கேட்கின்றார்.

இந்நிலையில், ஒரு நாள் ராமன் அவரது வீட்டிற்குச் சென்று போலீஸ் விசாரணை முடியும் வரை காப்புறுதி இழப்பீடு தர முடியாது என்கிறார். அதனைக் கேட்டு கோபமடைந்த அவர், ராமனைத் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே அனுப்புகின்றார். பிறகு, ராமன் இந்த வழக்குக் குறித்து ஆழமாக விசாரிக்கத் தொடங்குகின்றார். அப்பொழுது எதிர்பாராத திருப்பங்களைக் கண்டு பிடிக்கின்றார்.

நடிகை ஜாஸ்மின் மைக்கேல் முதல் முறையாக வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இவருடன் லிங்கேஸ், பால கணபதி, கிர்த்திகா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

3) அனல் விழியாள்

ஓர் தாயின் தியாகத்தையும் பணம் அனுப்புவதால் மாத்திரம் அத்தாயின் ஏக்கத்தைத் தீர்க்க முடியாது என்பதையும் உணர்த்தும் நாடகமாகும் இது. கடந்த 15 ஆண்டுகளாக அந்த இல்லத்தில் தங்கி வரும் வீரம்மாளின் வாழ்க்கையின் போராட்டங்கள் இந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றது.

இந்நாடகத்தில் ஜெயஸ்ரீ, முருகேசு, ஏகவள்ளி, சாமினி, நண்டு ரமேஷ், காயத்திரி, புனிதா ராஜா, ரேகா, புனிதா சண்முகம், சதிஷ் ராவ், கிஷோக், கர்ணன் ஜிகிராக், ராஜ், லீலாவதி, டேவிட் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

4) பினல் கோட் 302

உணர்ச்சிவசத்தால் தன்னிலை மறந்து சட்டத்தைக் கையில் எடுக்கும் ஒரு சமூகப் பொறுப்புமிக்க அதிகாரிக்கு, இறுதியில் சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறது? என்பதே கதைக்கரு.

கிரிதர் ராவ், பாடலாசிரியர் ஃபீனிக்ஸ்தாசன், ஜான்சன் பிளிக்சன், சேவியர் பிரவின், சங்கபைரவி, ராயர் கெங்கேஸ், விஜய் ஆம்ஸ்டராங், கேஷியாப் சூர்யா, விக்னேஸ் புஷ்பநாதன், பிரியா அருள், சங்கீதா உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நாட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான திவாகர் சுப்பையா இயக்கத்தில் இந்நாடகம் உருவாகியுள்ளது.

5) மர்ம கடிதம்

அன்பான கணவன் சுராஜ், அழகான மனைவி மாயா. திருமணமாகி 2 ஆண்டுகள், அழகாகப் பயணிக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் மாயா தற்கொலைச் செய்து கொள்கிறாள்.

மாயாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கும் சுராஜ், அதனை அறிவதற்கு முயற்சிக்கும் போது பல உண்மைகள் தெரிய வருகிறது. மனைவியின் தற்கொலைக்குத் தன் நண்பன் பிரவின் தான் காரணம் என்ற உண்மையும் தெரிய வருகிறது.

கள்ளக் காதலால் பலரின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மிகவும் எதார்த்தமாக கூறியிருக்கும் தொலைக்காட்சி நாடகம் “மர்ம கடிதம்”. இந்நாடகத்தில் பென்ஜீ, மணிமலர் பெருமாள், மணிவண்ணன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.