சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை இன்று நிரூபித்தன.
இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா மாநில முதல்வராகத் தொடர்வதில் எந்தவிதப் பிரச்சனையும் நேராது எனக் கருதப்படுகிறது.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்திலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்றைய சட்டமன்றக் கூட்டம் முறைப்படியும், அரசியல் அமைப்புச் சட்டங்களின்படியும் நடத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.