மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டதைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சபாநாயகர் ராகுல் நர்வேகர் முன்னிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 164க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தரப்பு எம்எல்ஏவான சந்தோஷ் பங்கார் முதலமைச்சர் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏவாக சேர்ந்து கொண்டார். இதையடுத்து உத்தவ் தாக்ரே தரப்பு மேலும் பலவீனம் அடைந்துள்ளது.
பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் ஷிண்டே அரசில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிண்டே முதல்வராக நீடிக்க பாஜக எல்லா வகையிலும் ஒத்துழைப்பை வழங்கும் என பட்நாவிஸ் கூறியிருக்கிறார்.