Home Featured தமிழ் நாடு பீப் பாடல் விவகாரம்: கோயம்பத்தூர் காவல்துறையிடம் சிம்பு நேரில் விளக்கம்!

பீப் பாடல் விவகாரம்: கோயம்பத்தூர் காவல்துறையிடம் சிம்பு நேரில் விளக்கம்!

821
0
SHARE
Ad

Simbuகோயம்பத்தூர் – பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று கோவை காவல் நிலையத்தில் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் கோயம்பத்தூர் காட்டூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற சிம்பு, தன் மீதான வழக்கு தொடர்பாக நேரில் விளக்கமளித்தார்.

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, “காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன். என் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தனது டுவிட்டரில் “பீப் பாடல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டன” என்று கூறியுள்ள சிம்பு, கோவை ரசிகர்கள் தனக்கு மிகப் பெரிய அளவிலான வரவேற்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.