Home Featured இந்தியா அரியானா முனாக் கால்வாயை இராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்தது!

அரியானா முனாக் கால்வாயை இராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்தது!

623
0
SHARE
Ad
jaat-protest--_647_022016112612சண்டிகார் – டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்களால், அடைக்கப்பட்ட முனாக் கால்வாயை தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது.
அரியானாவில் வாழும் ‘ஜாட்’ இன மக்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்களது போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முனாக் கால்வாயை போராட்டக்காரர்கள் அடைத்ததால், டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்தச் சூழ்நிலையில், தற்போது ராணுவம் முனாக் கால்வாயை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜாட் இனத்தவர்களின் இட ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக அரியானா அமைச்சரவை இன்று மதியம் கூடி விவாதிக்கிறது.
இதனிடையே, ஜாட் இனத்தவர்கள் போராட்டம் காரணமாக, இன்று லாகூர் – டெல்லி பஸ் போக்குவரத்து,
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
டெல்லியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
படம்: நன்றி (இந்தியா டுடே)