Home Featured தமிழ் நாடு சென்னை பேரிடர்: இலவச சேவையை அறிவித்தது ஸ்கைப்!

சென்னை பேரிடர்: இலவச சேவையை அறிவித்தது ஸ்கைப்!

440
0
SHARE
Ad

Skypeசென்னை – சென்னையில் மழை வெள்ளம் படிப்படியாக குறைந்து கொண்டு வரும் நிலையில், மக்களை மீட்பதும், தொடர்பு கொள்வதும் பெரும் சிரமமாக உள்ளது. பிஎஸ்என்எல் மட்டுமே இலவச சேவையை தொடங்கி உள்ள நிலையில், மற்ற தனியார் நிறுவனங்கள் செல்பேசி எண்களை வைத்து குறிப்பிட்ட அந்த பயனர்கள் இருக்கும் இடங்களை அவர்கள் குறித்து கேட்கும் உறவினர்களுக்கு அளித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு அனைத்துலக அழைப்பு சேவையை வரும் சில தினங்களுக்கு இலவச சேவையாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்”

“வெளிநாட்டில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்” என்று அறிவித்துள்ளது.