Home Featured தமிழ் நாடு அடுக்குமாடியில் சிக்கிக் கொண்டு உதவி கேட்டு கெஞ்சுகிறார் நடிகர் விக்னேஷ்!

அடுக்குமாடியில் சிக்கிக் கொண்டு உதவி கேட்டு கெஞ்சுகிறார் நடிகர் விக்னேஷ்!

585
0
SHARE
Ad

சென்னை – சென்னை மழை ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரையும் பாடாய் படுத்தி வருகின்றது.

இதில் நடிகர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா?

நேற்று நடிகர் ராஜ்கிரணை கிட்டத்தட்ட கழுத்தளவு வெள்ளத்தில் இருந்து மீட்டெடுத்தனர் இராணுவத்தினர்.

#TamilSchoolmychoice

Vikneshஇன்று பேஸ்புக்கில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றது. சுற்றிலும் வெள்ளத்தால் சூழ்ந்து கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து கொண்டு நடிகர் விக்னேஷ் உதவி கேட்டு கெஞ்சுகிறார்.

அவரது பேச்சில் அத்தனை பதட்டமும், பயமும் காணப்படுகின்றது. நடிகர் விக்னேசோடு சேர்த்து சுமார் 500 பேர் இராமாபுரத்திலுள்ள பத்மினி கார்டன் என்ற இடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மொட்டை மாடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்து தங்களுக்கு படகு ஒன்றை ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.facebook.com/srinoj/videos/10153634095717900/