Home Featured நாடு சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் நஜிப் ஆறுதல்!

சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் நஜிப் ஆறுதல்!

485
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வெள்ளத்தால் அவதியுறும் சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு ஆறுதலும் கூறியுள்ளார்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் சென்னை வெள்ளப் பேரிடரால் அவதியுறும் மக்களுக்கு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ள நஜிப் இந்திய அரசாங்கத்துக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Najib-twitter-chennai floods

#TamilSchoolmychoice

சென்னை வெள்ள நிலவரத்தால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவி வெள்ள அவசர உதவி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், +914424334434/35/36 ஆகிய எண்களில் அந்த மையத்துடன் அனைவரும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.