சென்னை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை நகரில், இந்தப் பேரிடர் தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி (மலேசிய நேரம்) வரையிலான இறுதி நிலவரச் செய்திகள் – சில வரிகளில்!
- இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர பேருந்துப் பயணங்களுக்கு சென்னையில் கட்டணமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- 53 இராணுவக் குழுக்கள் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன
- மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தொடர்ந்து இடையிடையே பெய்யும் மழையால் இடையூறுகள்
- 16,500 பேர் இராணுவம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் பணிக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
- தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களின் எண்ணிக்கையை 49ஆக அதிகரிக்க நடவடிக்கை
- இன்று முதல் சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி பயணச் சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும்
- நாளை முதல் விமான நிலையம் முழுமையாக இயங்கும் என அறிவிப்பு
- இலவச மருத்துவ சேவை வழங்குவதற்கு அப்போல்லோ மருத்துவமனை முன்வந்தது
- பால் விநியோகம் கிடைக்கவில்லை என்ற புகார்களைத் தொடர்ந்து 14 பால் விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.