Home Featured இந்தியா ஜபல்பூர் விமான நிலையத்தில் காட்டுப் பன்றிகளோடு ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதல்!

ஜபல்பூர் விமான நிலையத்தில் காட்டுப் பன்றிகளோடு ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதல்!

575
0
SHARE
Ad

Jabalpur-airport-spice jet-wilboar accidentஜபல்பூர் (இந்தியா)  – மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகர விமான நிலையத்தில் நேற்று மாலை 7.30 மும்பாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, காட்டுப் பன்றிகளின் மீது மோதியது.

இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஓடுதளத்திலிருந்து விலகி, பக்கத்தில் மோதிய விமானத்திலிருந்த 49 பயணிகளும் 4 பணியாளர்களும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டனர்.

விமானத்தைத் தரையிறக்கிய போது விமான ஓடுதளத்தில் காட்டுப் பன்றிகளைப் பார்த்ததால், அவசரமாக விமானத்தை நிறுத்த முற்பட்டதாகவும் அதன் காரணமாக விமானத்தை, ஓடுதளப் பாதையில் இருந்து விலகி, மோதலுடன் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் விமானத்தின் விமானி தெரிவித்துள்ளார்.