Home Featured நாடு தாய்லாந்தில் மலேசியத் தொழிலதிபர் சுட்டுக் கொலை!

தாய்லாந்தில் மலேசியத் தொழிலதிபர் சுட்டுக் கொலை!

586
0
SHARE
Ad

shot-deadஅலோர் ஸ்டார் – தாய்லாந்தில் உள்ள பான் லோங் பாம் என்ற இடத்தில் காஞ்சனாவனித் என்ற பகுதியில் நேற்று மலேசியத் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

நேற்று மதியம் மலேசிய நேரம் பிற்பகல் 1 மணியளவில் லீ ஆஹ் ஹான் (வயது 54) என்ற அந்த நபர், தனது காரில் ஹாட் யாட் விமான நிலையம் சென்று கொண்டிருந்த வேளையில், இரண்டு மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் இருக்கையில் இருந்த லீ தலையில் படுகாயமடைந்து பலியானார். அவருக்கு அருகே அமர்ந்து இருந்த பெண் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

 

மலேசியரான லீ, பல வருடங்களுக்கு முன்னரே தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் பாங்காக்கில் குடியேறிவிட்டதாகக் கூறப்படுகின்றது.