Home Featured தமிழ் நாடு நிவாரணப் பொருட்களிலுமா ‘அம்மா ஸ்டிக்கர்’? – மக்கள் கொந்தளிப்பு!

நிவாரணப் பொருட்களிலுமா ‘அம்மா ஸ்டிக்கர்’? – மக்கள் கொந்தளிப்பு!

591
0
SHARE
Ad

ADMKசென்னை – சென்னை வெள்ளம் பலத்த சேதங்களை ஏற்படுத்தினாலும், மக்களிடையே ஜாதி, மத பேதங்களில் இன்றி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பியிருக்கிறது.

மீட்புக் குழுவினரும், இராணுவமும் களத்தில் இறங்கி விட்டாலும் கூட, ஒவ்வொருவரும் தனக்கென ஒரு பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள்.

ஆனால், இத்தனை பேரிடருக்கு மத்தியிலும், அரசியல் தலைவர்களும், அவர்களைச் சார்ந்த தொண்டர்களும் திருந்துவதாய் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

நேற்று ஆளுங்கட்சியான அதிமுக-வைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்த உணவுப் பொருட்களில் இருந்த ‘அம்மா படம்’ மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

டுவிட்டரில் வெளியாகியுள்ள அப்புகைப்படங்களில், உணவு மூட்டைகளின் மீது முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் புகைப்படங்களை அதிமுக தொண்டர்கள் ஒட்டுவது போல் காட்சிகள் உள்ளன.