Home One Line P2 வெள்ள எச்சரிக்கை அமைப்பு முறை இந்தியாவில் முதலாக சென்னையில் அறிமுகம்!

வெள்ள எச்சரிக்கை அமைப்பு முறை இந்தியாவில் முதலாக சென்னையில் அறிமுகம்!

1632
0
SHARE
Ad
படம்: நன்றி டி இந்து

சென்னை: சென்னையில் அறிவார்ந்த வெள்ள எச்சரிக்கை முறையை பயன்படுத்த தமிழகம் தயாராக உள்ளதாக தமிழக பேரழிவு மேலாண்மை மற்றும் தணிப்பு தலைமை அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் இது பகுதி வாரியாக வெள்ளப்பெருக்கு விவரங்களை பெற அதிகாரிகளுக்கு உதவும். சிப்ளோஸ் (CFLOWS) எனப்படும் தொழில்நுட்பம் இந்தியாவின் முதல் கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு முறையாகும். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் இது கருத்துருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு முறை ஒரு முன்மாதிரியாக அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இது சென்னைக்கு மட்டுமல்லாமல், கடலோர நகரங்களான மும்பை மற்றும் வெள்ளப்பெருக்கு வழக்கமாகி வரும் பிற நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சிப்ளோஸ் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். டிஎன்ஸ்மார்ட் (TN Smart) எனப்படும் மாநில அரசின் பேரழிவு மேலாண்மை அகப்பக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பு இது 1 அல்லது 2 வாரங்களுக்கு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.