“இது இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விளக்கப்பட்டுள்ளதா?” டிஏபி மூத்தவர் இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வாரம் முதலாக, விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளால் மலேசியர்கள் ‘கலக்கமடைந்துள்ளனர்‘ என்று லிம் கூறினார். இந்த குழுவில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தென்கிழக்கு ஆசியாவில் ஐஎஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மலேசியா தயாராக உள்ளாதா என்ற கேள்வியையும் லிம் எழுப்புயுள்ளார்.
“படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவை, மீண்டும் இணையத்தில் பதிவேற்றப்பட்டு செய்யப்பட்டு ஒரு ‘முற்றுகை மனநிலையை‘ உருவாக்கி உள்ளது. இவை விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்கான சான்றுகள் என அழைக்கப்படுகிறது. ஆனால், விடுதலைப் புலிகள் தற்போது செயலில் இல்லை” என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் முதல், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதாக இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களான ஜி.சாமிநாதன் மற்றும் பி.குணசேகரன் உட்பட 12 நபர்களை பயங்கரவாத எதிர்ப்புக் குழு கைது செய்தது.
அவர்கள் அனைவரும், பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இவ்வாண்டு தொடக்கத்தில் ஐஎஸ் புதைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சிரியா சிறையில் என்ன நடக்கும் என்பது குறித்து உலகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று லிம் கூறினார்.
சிரியா சிறையில் சுமார் 12,000 போராளிகள் உள்ளனர். மலேசியாவிலிருந்து சுமார் 65 பேரும், இந்தோனிசியாவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களும் அகதிகளாக உள்ளனர் என்று அவர் கூறினார்.