Home Featured இந்தியா 2015-ஆம் ஆண்டின் சிறந்த இந்தியர் – சென்னை மக்கள்! – சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சி...

2015-ஆம் ஆண்டின் சிறந்த இந்தியர் – சென்னை மக்கள்! – சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சி தேர்வு!

932
0
SHARE
Ad

CNN.News18புதுடில்லி – ஆங்கில செய்தித் தொலைக்காட்சி அலைவரிசையான சிஎன்என்-நியூஸ் 18.காம் – நேற்றிரவு நடத்திய விருதளிப்பு விழாவில் ஒவ்வொரு துறையிலும் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்தியர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவித்தது.

அந்த வரிசையில் ஒட்டு மொத்தமாக 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்தியர் விருது – சென்னை மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் சென்னை மக்கள் காட்டிய பொறுப்புணர்வு, நல்லெண்ணம், ஒற்றுமை போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மக்கள் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்தியராக – தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த விருதுகளை இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.