Home Featured உலகம் எம்எச்370: ஆஸ்திரேலியா தீவு ஒன்றில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

எம்எச்370: ஆஸ்திரேலியா தீவு ஒன்றில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

925
0
SHARE
Ad

MH370சிட்னி – தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு ஒன்றின் கரையோரத்தில் விமானத்தின் பாகம் போன்ற பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

“கிடைத்துள்ள அந்தப் பாகத்தை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றோம். அதன் முடிவிற்காகக் காத்திருக்கிகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

“தற்போதைக்கு எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரே தகவல் அது ஒரு சிதைந்த பாகம் என்பது தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கேங்க்ரூ தீவு என்ற பகுதியில் சிலர் மரப் பலகைகளைச் சேகரிக்கச் சென்ற போது, அவர்களுக்கு இந்தப் பாகம் கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியத் தொலைக்காட்சியான சேனல் செவன்  செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை நிறத்திலான அந்தப் பாகத்தில் “”Caution no step” என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.