Home Slider ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல்

ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல்

1389
0
SHARE
Ad

Bombay Jayshreeஜனவரி 11 – ” லைப் ஆப் பை ” என்னும் ஆங்கிலப் படத்தில், ஒரு தாலாட்டு பாடலை எழுதியதற்காக, சிறந்த பாடலாசிரியர் பிரிவில் ஆஸ்கார் விருதிற்கு பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் திறமையால் இந்தியாவின் வசம் வந்த ஆஸ்கார் விருது, இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவை நோக்கிவர வாய்ப்புகள் ஏற்பட்டதற்கு பிரபல கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தான் காரணம்.

லைப் ஆப் பை ” என்னும் ஆங்கில படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ எழுதி, இசையமைத்து பாடிய தாலாட்டு பாட்டிற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப்பட்ட ” லைப் ஆப் பை ” திரைப்படம் இந்தியர்கள் நடிக்க, ஆங்கில முன்னணி இயக்குனர் ஆங் லீ இயக்கிய படமாகும்.

பாம்பே ஜெயஸ்ரீ சிறு வயதிலிருந்தே கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறைப்படி கற்று தேர்ந்தவர்.பல முன்னணி இசை அமைப்பாளர்களுடன் பணிபுரிந்த பெருமையும் பாம்பே ஜெயஸ்ரீயை சாரும்.

ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யபட்டிருக்கும் முதல் தமிழ் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.