கோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை அளித்தவர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘நன்கொடையாளர்கள்’ என பண்மையில் கூறியதற்குக் காரணம், அந்த நன்கொடையாளர் சார்பில் நிறைய பிரதிநிதிகளைத் தான் சந்தித்ததாகவும், அதனால் நான் பண்மையில் கூறியதாகவும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், நன்கொடையாளர் தனிநபரா? அல்லது அரசாங்கத்தைச் சேர்ந்தவரா? என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சாஹிட், அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தான் விளக்கமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.