இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக தற்போது மூன்று கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை தங்கள் அகரம் அறக்கட்டளை, தத்தெடுத்துள்ளதாக சூர்யா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தி நடிகர் அக்ஷய்குமார், சுஹாசினி மணிரத்னத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஜெயேந்திரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடி நிதி அளித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், முதல்வர் நிவாரணநிதிக்கு 1 கோடி ரூபாய், நிதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.