கோலாலம்பூர் – அம்னோவுடன் பாஸ் கூட்டணி சேர்வது குறித்த விருப்பத்தை அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையில் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று மலாய்காரர்களின் ஒற்றுமை பற்றிய மாநாடு ஒன்றில் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குடன் ஒரே மேடையில் அமர்ந்து நட்பு பாராட்டியுள்ளார்.
அல் அசார் பட்டதாரிகளுக்காக நடைபெற்ற வட்டார மாநாட்டில், பாஸ் தலைவர் ஹாடி அவாங்குக்கு அருகில் நஜிப் அமர்ந்திருந்தார்.
அம்மாநாட்டில் ஹாடி உரையாற்றுகையில், முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு அரசியல் சித்தாந்தங்கள் தடையாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
அவ்வாறு முஸ்லிம்களிடையே அரசியல் சித்தாந்தங்கள் மாறுபட்டு இருந்தால், அது முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகப் போராக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (The Star)