Home Featured கலையுலகம் அப்பப்பா அரட்டும் மாதவன் – மிரட்டும் இறுதிச்சுற்று முன்னோட்டம்!

அப்பப்பா அரட்டும் மாதவன் – மிரட்டும் இறுதிச்சுற்று முன்னோட்டம்!

810
0
SHARE
Ad

r-madhavanசென்னை – நீண்ட தலைமுடி, வித்தியாசமான தாடி, ஆஜானுபாகுவான உடல்வாகு என தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு மாதவன் நடித்து இருக்கும் பட ‘இறுதிச் சுற்று’. இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவின் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் பற்றியும், அதே துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இந்த படம், உரக்கப் பேசப்போவதாக தெரிகிறது. நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்த படம், வரும் ஜனவரி மாதம் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. சுதா கொங்கர இயக்கி இருக்கும் இந்த படத்தை, ‘பிகே’ படப் புகழ் ராஜ்குமார் ஹிரானி தயாரித்து இருக்கிறார்.