Home Featured தமிழ் நாடு “இந்தியாவே பற்றி எரியும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு!

“இந்தியாவே பற்றி எரியும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு!

744
0
SHARE
Ad

evks-elangovanமதுரை – நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்காவிட்டால், இந்தியாவே பற்றி எரியும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறக்கோரியும், இந்த வழக்கிற்கு காரணமான சுப்பிரமணிய சுவாமியைக் கண்டித்தும் மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், “இன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய ஆபத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த கட்சியை பழிவாங்கும் நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். பல நாட்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு, சில நாட்கள் மட்டும் இந்தியாவில் தங்கும் மோடி, காங்கிரஸ் கட்சியை எப்படி பலவீனப்படுத்தலாம் என திட்டமிடுகிறார். நேரு குடும்பத்தைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. 120 ஆண்டு கால இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது நேரு குடும்பம்.”

#TamilSchoolmychoice

“பதவி ஏற்ற ஒரு ஆண்டிற்குள் மோடியின் சாயம் வெளுத்து விட்டது. எனவே, மீதி உள்ள 4 ஆண்டுகளில் மோடி ஆட்சி இந்தியாவில் நீடிக்காது. கண்ணகி நீதி கேட்டு மதுரையை எரித்தார். சோனியா, ராகுல் காந்திக்கு நீதி கிடைக்காவிட்டால் இந்தியாவே பற்றி எரியும்” என்று அவர் பேசியுள்ளார்.

இந்தியாவே எரியும் என்று இளங்கோவன், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.