Home அரசியல் பொதுத்தேர்தலின் அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் சதி – துணைப்பிரதமர் மொய்தீன் யாசின்

பொதுத்தேர்தலின் அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் சதி – துணைப்பிரதமர் மொய்தீன் யாசின்

479
0
SHARE
Ad

Muhyiddin-Yassin-a-300x192கோலாலம்பூர், மார்ச் 14- எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் இடையூறுகள் செய்து அதன் அமைதியை சீர்குலைக்க எதிர்க் கட்சியினர் சதி செய்துவருகிறார்கள் என்று  துணைப்பிரதமர் மொய்தீன் யாசின் நேற்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பண்டார் புக்கிட்  செந்தோசா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அவரது உரையில் “எதிர்க்கட்சியினர் தேசிய முன்னணிக்கு மக்களிடையே பெருகும் ஆதரவைக் கண்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். அதனால் தான் இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டி வருகிறார்கள். அவர்களின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்த எங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன” இவ்வாறு கூறினார்.

எதிர்க் கட்சித்தலைவர் அன்வார் பற்றி அவர் பேசுகையில்,” அன்வார் இப்ராஹிம் இத்தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் உடனே தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்திவிடுவார். இப்போது அவர் தன்னுடைய பிரதமர் கனவு நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்ததால் தான் இது போன்ற சதி வேலைகளை செய்யத் திட்டமிட்டுள்ளார்” என்று அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice