சிட்னி – பொதுவாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாம் செல்ல நேர்ந்தால், நாம், பயணயிடம் சென்றடைந்ததும் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால், அயர்லாந்தைச் சேர்ந்த சாகசப் பயணி ரோஜர் ரியான், சமீபத்தில் தனது பெற்றோரை ஸ்கைப் காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு, தான் விமானத்தில் இருப்பதாகவும், ‘ஸ்கை டைவிங்’ (Skydiving) செய்யப்போவதாகவும் கூறிக் கொண்டே வானத்தில் இருந்து விழுந்தார்.
தனது மகன் வானத்தில் இருந்து விழுவதை ஸ்கைப் வழியே பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். ரோஜர் மட்டுமல்லாது பலரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமீபத்தில் இந்த சாகசத்தை நிகழ்த்திக் காட்டினர்.
அந்த காணொளியைக் கீழே காண்க: