Home Featured தொழில் நுட்பம் ஐஒஎஸ், அண்டிரொய்டு கருவிகளுக்காக புத்தம் புதிய ஸ்கைப்!

ஐஒஎஸ், அண்டிரொய்டு கருவிகளுக்காக புத்தம் புதிய ஸ்கைப்!

616
0
SHARE
Ad

skype

கோலாலம்பூர் – அனைத்து தொழில்நுட்ப வர்த்தகமும் திறன்பேசி தளத்தை நோக்கி படுவேகமாக முன்னேறி வருகின்றது. காலத்திற்கு தகுந்தார் போல் அனைத்து வர்த்தகத்திலும் தன்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கும் வந்துள்ளது. அதன் சமீபத்திய வெளிப்பாடு தான், மைக்ரோசப்ட் தொடர்ந்து தனது அனைத்து தயாரிப்புகளையும் செயலிகளுக்கான தளத்தை நோக்கி நகர்த்தி வருவது.

ஆபிஸ் பயன்பாட்டை சிறப்பான செயலியாக மாற்றிக் காட்டிய அந்நிறுவனம், ஸ்கைப் செயலியையும் சிறப்பான முறையில் மேம்படுத்த கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தது. இந்நிலையில் தான், ஐஒஎஸ், அண்டிரொய்டு கருவிகளுக்காக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புத்தம் புதிய ஸ்கைப் 6.0 வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அண்டிரொய்டிற்கான ஸ்கைப் 6.0

இதுவரை அண்டிரொய்டிற்கான ஸ்கைப் செயலியில் இருந்த பல்வேறு வசதிகளும், மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக மிக எளிதான முறையில், குறுந்தகவல், காணொளி அழைப்பு மற்றும் அளவளாவல்களைத் தொடர்வதற்காக ‘ஃப்ளோடிங் ஆக்சன் பொத்தான்’ (Floating action button) மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அன்ரீட் (Unread) மெசேஜ்கள் என்று கூறப்படும் நாம் படிக்காத மெசேஜ்கள் எத்தனை என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். அதேபோல், முக்கியமான காண்டாக்ட்டுகளை (Contacts) உடனே பெறுவதற்காக மிகச் சிறந்த தேடல் (Enhanced Search) வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஒஎசிற்கான ஸ்கைப் 6.0

அண்டிரொய்டில் எனென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவோ அவை மட்டுமல்லாமல், ஐஒஎஸ் பயனர்கள் இதுவரை உணர்ந்திராத ஸ்கைப் செயல்பாடுகளை, இந்த புதிய பதிப்பில் மேம்படுத்தி உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.