Home Featured இந்தியா “ஸ்கைப்” மூலம் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் ஜாகிர் நாயக்!

“ஸ்கைப்” மூலம் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் ஜாகிர் நாயக்!

893
0
SHARE
Ad

Zakir Naikமும்பை – சர்ச்சையில் சிக்கியிருக்கும் இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் (படம்), அடுத்த சில வாரங்களுக்கு இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மும்பையில் ஓர் இடத்தில் ஜாகிரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்கைப் எனப்படும் இணைய காணொளி உரையாடல் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு ஸ்கைப் மூலம் ஜாகிர் இந்தியப் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவிருக்கின்றார். இதற்காக ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியத் தொலைக்காட்சிகள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.