கோலாலம்பூர் – பேங்க் நெகாரா எனப்படும் மலேசிய மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களை 0.25 புள்ளிகள் குறைத்து 3.00 சதவீதமாக அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசிய ரிங்கிட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்ந்தது.
2009ஆம் ஆண்டு முதற்கொண்டு பேங்க் நெகாரா வட்டி விகிதங்களைக் குறைப்பது இதுதான் முதன் முறையாகும்.
இன்று மாலை 5.00 மணிக்கு நாணய வணிகம் நிறைவடைந்தபோது, ரிங்கிட்டின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு 3.9690 ஆக இருந்தது. நேற்று மலேசிய ரிங்கிட் மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு 3.9785 ஆக இருந்தது.