கடந்த 24 ஆண்டுகளில் காணாத பெரும் சரிவு இதுவென நாணய சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி 1998 முதல் ரிங்கிட்டின் நாணய மதிப்பு இப்போதுதான் இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது. எனினும் இந்த நாணய வீழ்ச்சியால் மலேசிய பொருளாதாரம் பலவீனமாக இருக்கிறது எனப் பொருள்படாது என நிதியமைச்சர் தெங்கு சப்ருல் தெரிவித்திருக்கிறார். அவரின் அந்தக் கூற்றை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
15-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிங்கிட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சி அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும்.