Home நாடு ரிங்கிட் மதிப்பு மேலும் சரிவு – டாலருக்கு 4.52 ஆகக் குறைந்தது

ரிங்கிட் மதிப்பு மேலும் சரிவு – டாலருக்கு 4.52 ஆகக் குறைந்தது

695
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசிய ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று புதன்கிழமை (செப்டம்பர் 14) காலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு 4 ரிங்கிட் 52 காசு (4.52) என்ற அளவில் ரிங்கிட் நாணய சந்தையில் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

ஜனவரி 1998 முதல் ரிங்கிட்டின் நாணய மதிப்பு இப்போதுதான் இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது. எனினும் இந்த நாணய வீழ்ச்சியால் மலேசிய பொருளாதாரம் பலவீனமாக இருக்கிறது எனப் பொருள்படாது என நிதியமைச்சர் தெங்கு சப்ருல் தெரிவித்திருக்கிறார்.

15-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிங்கிட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சி அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக உருவெடுக்கலாம்.